அதிமுகவுடன் கூட்டணியா? காங்கிரஸ் விளக்கம்

75952பார்த்தது
அதிமுகவுடன் கூட்டணியா? காங்கிரஸ் விளக்கம்
மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மூன்று மாவட்ட காங்கிரஸ் கமிட்டி நிர்வாகிகள் மற்றும் வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் மயிலாடுதுறையில் நடைபெற்றது. அப்போது செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, தமிழக மக்களின் மனசாட்சியாக ஆட்சி செய்து வரும் முதல்வர் காங்கிரஸ் கட்சிக்கும் மனசாட்சிப்படி உரிய தொகுதிகளை வழங்குவார். 400 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். திமுகவுடன் பல ஆண்டுகளாக கூட்டணியில் உள்ளோம். எனவே, திமுகவை விட அதிக இடங்களை ஒதுக்கினாலும் அதிமுகவுடன் கூட்டணி சேரமாட்டோம் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி