மஹா சிவ ராத்திரிக்கு அரசு விடுமுறை

1063பார்த்தது
மஹா சிவ ராத்திரிக்கு அரசு விடுமுறை
இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வர சி. சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்து சமய அறநிலையத்துறை கூட மகா சிவராத்திரி விழாவை தமிழக கோவில்களில் நடத்தி வருகிறது. இப்படி ஒட்டுமொத்த மக்களின் பெருவிழாவான சிவராத்திரி திருநாளிற்காக 15-க்கும் மேற்பட்ட மாநிலங்கள் பொது விடுமுறை அளித்துள்ளன. அதே போல இறைவனை தரிசிக்க தமிழக அரசு மகாசிவராத்திரி திருநாளான மார்ச் 8-ந் தேதி அன்று பொதுவிடுமுறை அளிக்க வேண்டும். பக்தர்கள் புகழ் பெற்ற கோவில்களுக்கு செல்வதற்காக 7, 8 மற்றும் 9-ந் தேதிகளில் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் கூடுதல் பஸ்கள் இயக்க வேண்டும் என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி