ஆள் இல்லாத வீட்டில் ரூ. 50, 000 பணத்தை திருடி சென்ற மர்மநபர்கள்.
கடலூர் மாவட்டம் வேப்பூர்வ எதிர்க்காம்பிகை நகரை சேர்ந்தவர் உமா வயது 36 கணவர் பெயர் பாலகுர இவர் வீட்டில் தனியாக வசித்து வருகிறார் இவரது கணவர் வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார் இவர்களுக்கு தினேஷ் வயது 23 ரித்திகேஷ் வயது 19 என்ற இரு ஆண் மகன்கள் உள்ளனர் இவர்கள் இருவரும் சென்னையில் உள்ளார்கள்.
உமா 4. 6. 2024 காம் தேதி அன்று அவரது அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை என பார்க்க அவரது சொந்த ஊரான ஆலம்பாடி கிராமத்திற்கு சென்றுவிட்டார்.
மறுநாள் மே ஐந்தாம் தேதி அன்று வீட்டிற்கு வந்துள்ளார் அப்போது வீட்டின் முன்பக்க கதவு உடைத்து கிடந்துள்ளது இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
உடனே வெளிநாட்டில் உள்ள அவரது கணவருக்கு உமா தகவல் தெரிவித்தார் அதில் மூன்று பீரோவை மர்மநபர்கள் உடைத்து 50 ஆயிரம் பணத்தை திருடி சென்றனர்.
இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த வேப்பூர் போலீசார் உதவியுடன் கைரேகை பிரிவு டிஎஸ்பி ஸ்ரீதர் சம்பவ இடத்தில் விசாரணை செய்து வருகிறார்கள்.
மேலும் திருடிச் சென்ற மர்ம நபர்களை வேப்பூர் போலீசார் தேடி வருகிறார்கள்.