பண்ருட்டி: தூர்வாரும் பணியை பார்வையிட்டு ஆய்வு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சிக்கு உட்பட்ட 25 வது வார்டில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை முன்னிட்டு கழிவுநீர் கால்வாய்களை தூர்வாரும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதனை பண்ருட்டி நகர மன்ற தலைவர் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நகர செயலாளர் கா இராஜேந்திரன் நேரில் சென்று பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்த உத்தரவிட்டார். உடன் நகர மன்ற உறுப்பினர் சண்முகவள்ளி பழனி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.