பனப்பாக்கம்: மக்களுடன் முதல்வர் திட்டம்

63பார்த்தது
மக்களுடன் முதல்வர் என்ற நிகழ்ச்சியின் மூலம் பொதுமக்கள் கொடுக்கின்ற மனுக்களுக்கு உடனடி தீர்வு காணும் நிகழ்ச்சி கடலூர் மாவட்டம் பண்ருட்டி அடுத்த பனப்பாக்கம் ஸ்ரீ ருக்குமணி கிருஷ்ணா நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பண்ருட்டி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் T. வேல்முருகன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முகாமினை தொடங்கி வைத்தார். வேளாண்மை ஆத்மா குழு தலைவர், தலைமை செயற்குழு உறுப்பினர், அண்ணாகிராமம் ஒன்றிய கழக செயலாளர் வி. கே. வெங்கட்ராமன் தலைமையில் நடைபெற்ற இந்த முகாமில் பண்ருட்டி வட்டாட்சியர் ஆனந்தன் அவர்களும், அண்ணாகிராமம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் முருகன் ( நிர்வாகம்) ரவிச்சந்திரன் ( திட்டம்) அவர்களும், பொதுக்குழு உறுப்பினர் N. பலராமன், மாவட்ட பிரதிநிதி பைத்தாம்பாடி K. ராமு, கரும்பூர் ராஜசேகர், மாவட்ட விவசாய தொழிலாளர் அணி துணைத் தலைவர் பகண்டை எழில் செல்வம், மாவட்ட கலை இலக்கிய பகுத்தறிவு பேரவையின் அமைப்பாளர் வழக்கறிஞர் E. மதனகுரு, தட்டாம் பாளையம் முன்னாள் ஊராட்சி மன்ற துணைத் தலைவர் T. ஜெயமூர்த்தி, ஒன்றிய துணைச் செயலாளர் V. ஆறுமுகம், ஒறையூர் R. ராஜ்குமார், ஒன்றிய இளைஞரணி துணை அமைப்பாளர், கள்ளிப்பட்டு ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் கள்ளிப்பட்டு K. ராஜி (எ) ராஜசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி