திருஅருட்பிரகாச வள்ளலார் 202-ஆம் ஆண்டு வருவிக்க உற்றநாளை முன்னிட்டு கடலூர் மாவட்டம் வடலூரில் திரு அருட்பிரகாச வள்ளலார் தெய்வ நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம், மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஆகியோர் பங்கேற்று கொடியேற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். உடன் அதிகாரிகள் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.