நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குமேலூர் கிராமத்தில் உள்ள பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் ஆடி செடல் திருவிழாவை முன்னிட்டு பாட்டு கச்சேரி நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் சுவாமி வேடத்தில் நடனமாடிய காட்சி நடைபெற்றது. இது மட்டும் இல்லாமல் கோவிலில் சுவாமிக்கு பல்வேறு திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.