கடலூர் மாவட்டம் நெய்வேலி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வடக்குத்து முகப்பு சாலையில் உள்ள மின் கம்பத்தில் புதர் செடிகள் மின் கம்பிகள் வரை சூழ்ந்து காணப்படுகிறது.
இதனால் அப்பகுதியில் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. இதனை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.