தோப்புக்கொல்லை: இரவிலும் பாலம் கட்டும் பணி தீவிரம்

63பார்த்தது
கடலூர் - விருத்தாசலம் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சாலை அகலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட குள்ளஞ்சாவடி அருகே உள்ள தோப்புக்கொல்லை கிராமத்தில் சிறு பாலம் கட்டும் பணி இரவு பகல் பாராமல் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கூறுகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி