சிங்கப்பூர் நாடுகளுக்கு அரசு முறை பயணமாக வந்த வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற உறுப்பினர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் இன்று சிங்கப்பூர் தேசிய பல்கலைக் கழகத்தின் கீழ் உள்ள தொழில் முனைவோர் மைய வளாகத்தில் அமைந்துள்ள சிங்கப்பூரின் செயற்கை நுண்ணறிவு மையத்தினை பார்வையிட்டு, அதன் அதிகாரிகளான டாக்டர் டேரியஸ் மற்றும் டாக்டர் வில்லியம் ஆகியோருடன் வேளாண்மை சார்ந்த தொழில்நுட்பங்களையும் இதர தகவல்களையும் தமிழ்நாடு விவசாயிகளுக்கு விரைந்து எடுத்துச் செல்லும் செயற்கை நுண்ணறிவு காரணியான சாட் ஜி பி டி தகவல் தொழில்நுட்பம் மூலம் கொண்டு சேர்ப்பதற்கு கலந்து ஆலோசித்தார்.
தமிழ் மொழியானது சிங்கப்பூரில் ஆட்சி மொழியாக உள்ளதால் இம்மையம் தமிழ்நாடு அரசுடன் இணைந்து இந்த தொழில்நுட்பத்தை உருவாக்க இசைவு தெரிவித்துள்ளது. இதற்கான மேல் நடவடிக்கைகள் தமிழ்நாடு முதலமைச்சர் கலந்தாலோசித்து எடுக்கப்படும். இந்நிகழ்வின் போது, வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் அபூர்வா, தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் முனைவர் வி. கீதாலட்சுமி மற்றும் பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.