கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ராமாபுரம் ஊராட்சியில் மாதா கோவில் கிராமத்தில் புதிய குடிநீர் குழாய் புதைக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திமுக மாநில தலைமை செயற்குழு உறுப்பினர் V. ஞானசேகரன், ஒன்றிய செயற்குழு உறுப்பினர் P. ராமலிங்கம் மற்றும் கிளை கழக செயலாளர் தனபால் மற்றும் திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.