கடலூர் மாநகராட்சி பாலன் காலனியில் 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய கூடம் திறப்பு விழாவில் கடலூர் சட்டமன்ற உறுப்பினர் ஐயப்பன் எம்எல்ஏ தலைமையேற்று சமுதாய கூடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சிக்கு கடலூர் மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் முன்னிலை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் கடலூர் மாநகராட்சி மேயர் சுந்தரி ராஜா, கடலூர் மாநகராட்சி ஆணையர் ஐஏஎஸ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்று சிறப்பித்தனர்.