'கீதா கோவிந்தம்’ தெலுங்கு படத்தில் நடித்தபோது அதில் ஹீரோவாக நடித்த விஜய் தேவரகொண்டாவுக்கும் ஹீரோயினாக நடித்த ராஷ்மிகாவுக்கும் இடையே காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் பொது இடங்களில் ஜோடியாக எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் வைரலானது. இந்நிலையில் இவர்களின் காதலுக்கு இரு வீட்டாரும் சம்மதித்துவிட்டதாக கூறப்படுகிறது. ஏப்ரல் முதல் வாரத்தில் இவர்களின் திருமணம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.