கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள ஓமக்குளம் மெயின் ரோடு குப்பைமடு பகுதியை சேர்ந்த மகாராஜன் இவரது மகன் ரித்திகேஷ் சம்பவத்தன்று இரவு இவர் ஓமக்குளம் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது அந்த வழியாக வந்த தனியார் பேருந்து அவர் மீது எதிர்பாராத விதமாக மோதியது. இதில் பலத்த காயமடைந்த ரித்திகேஷை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த ரித்திகேஷ் நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து புகாரின் பேரில் சிதம்பரம் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.