புரட்சியாளர் அம்பேத்கரின் 68 வது நினைவு தினத்தை முன்னிட்டு சிதம்பரம் நகரம் 1 வது வார்டில் அமைந்துள்ள அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக சிதம்பரம் வடக்கு மெயின்ரோட்டில் உள்ள அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் நகர செயலாளர் புருஷோத்தமன், பெருமாள், நகர பொதுச்செயலாளர் மாவீரன் குமார், பாரதிய ஜனதா கட்சியின் பொறுப்பாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.