கடலூர் மாவட்டம் சிதம்பரம் சுப்பிரமணியன் தெருவில் எழுந்தருளியுள்ள அருள்மிகு ஸ்ரீ வல்லபி மாரியம்மன் திருக்கோயில் 76 ஆம் ஆண்டு ஆடி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு முதலாம் திருநாள் அம்பாள் கொடியேற்றம் மற்றும் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி வெகு விமரிசையாக நடைபெற்றது.
இதில் அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.