சிதம்பரம் நகரத்தில் உள்ள 48 பூத்துகளில் இன்று (நவம்பர் 30) பாஜக அமைப்பு தேர்தல் நடைபெற்றது. 11 பூத்துகளில் கிளை தலைவர்கள் சத்தியப்பிரமாணம் செய்து தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளனர். நடந்த கிளை தேர்தலில் மாவட்ட தேர்தல் அதிகாரி விஜயரங்கன், மாவட்ட பொருளாளர் முருகன், மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், அகத்தியர் மற்றும் சிதம்பரம் மண்டல பொதுச் செயலாளர் குமார், சின்னிக்கிருஷ்ணன், நகரச் செயலாளர் செந்தில்குமார் ராஜமுருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.