அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக பொதுச் செயலாளர் மற்றும் எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி ஆணைக்கிணங்க கடலூர் மேற்கு மாவட்டத்தில் அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக தலைமை உத்திரவின்படி ஒன்றிய, நகர, பேரூராட்சிகளின் செயல் வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனைக் கூட்டங்களை சிறப்பாக நடத்துவது குறித்து ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் புவனகிரியில் புவனகிரி சட்டமன்ற உறுப்பினர் மற்றும் அதிமுக மேற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழிதேவன் எம்எல்ஏ தலைமையில் நடைபெற்றது. 13. 10. 2024 முதல் 18. 10. 2024 வரை 16 இடங்களில் ஆலோசனைக் கூட்டங்கள் நடத்துவதற்கு இடம், நேரம், ஆலோசனை வழங்குபவர்கள் குறித்து அனைவரிடமும் கலந்தாலோசித்து முடிவு செய்யப்பட்டது.