CSK கோப்பையை வெல்லும்.. கமல்ஹாசன்

565பார்த்தது
CSK கோப்பையை வெல்லும்.. கமல்ஹாசன்
இன்றைய தினம் ஆர்சிபி மற்றும் சிஎஸ்கே இடையிலான ஐபிஎல் போட்டி நடக்கவுள்ளதை ஒட்டி கமல்ஹாசன் பேசினார். அதில் தன்னுடைய ஆதரவு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குதான் என்று அவர் குறிப்பிட்டார். மெட்ராஸ் என்ற பெயரை சென்னை என்று பெயர் மாற்றம் செய்து அழகு பார்த்த தலைமுறை தங்களுடையது என்று அவர் பெருமை தெரிவித்தார். சென்னை என்ற பெயர் புழக்கத்தில் வருமா என்று காத்திருந்த காலக்கட்டத்தை குறிப்பிட்ட கமல்ஹாசன். தற்போது சென்னை கிங்சே வந்து விட்டதாகவும் குறிப்பிட்டார். இந்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியே இந்த முறை கோப்பையை வெல்லும் என்று அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி