மழையால் நின்ற சென்னை - பெங்களூர் போட்டி

50பார்த்தது
மழையால் நின்ற சென்னை - பெங்களூர் போட்டி
பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் மழை குறுக்கிட்டதால் பெங்களூர் - சென்னை அணிகளுக்கு இடையேயான போட்டி தடைப்பட்டுள்ளது. இதனால், போட்டி ஆரம்பித்து அதிரடியாக விளையாடி வந்த பெங்களூர் அணியினர் கவலை அடைந்துள்ளனர். 3 ஓவர்கள் முடிவில் பெங்களூர் அணி 31 ரன்கள் எடுத்திருந்தது. விராட் கோலி 19, டூ பிளஸ்ஸி 12 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் உள்ளனர். மழை எப்போது நிற்கும் என மைதானத்தில் உள்ள ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளனர்.

தொடர்புடைய செய்தி