அதிரடி ஆட்டம் ஆடி அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே!

62பார்த்தது
அதிரடி ஆட்டம் ஆடி அபார வெற்றி பெற்ற சிஎஸ்கே!
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில்
சென்னை சூப்பர் கிங்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதின. ஹைதராபாத் அணி டாஸ் வென்று பவுலிங் தேர்வு செய்தது. முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 20 ஓவர்கள் முடிவில் 212 ரன்கள் குவித்திருந்தது. 213 ரன்கள் என்ற இலக்குடன் பேட்டிங் இறங்கிய ஹைதராபாத் அணி வீரர்கள் அடுத்தடுத்து விக்கெட் ஆகினர்.

18.5 ஓவர்களில் அணியில் அனைவரும் ஆல் அவுட் ஆகினர். 213 என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதராபாத் அணி 134 ரன்களில் சுருண்டது. 78 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே அணி அபார வெற்றி பெற்றது.

தொடர்புடைய செய்தி