பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு

77பார்த்தது
பயிர் கடன் உச்ச வரம்பு ரூ.2 லட்சமாக உயர்வு
சிறு, குறு விவசாயிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கத்தில், அடமானமில்லா பயிர் கடன் உச்சவரம்பை ரூ.2 லட்சமாக உயர்த்தி ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இது வரும் ஜனவரி மாதம் அமலுக்கு வருகிறது. தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகளுக்கான பயிர் கடன் ரூ.1.60 லட்சம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த உச்ச வரம்பை உயர்த்த விவசாய சங்கங்கள் கோரிக்கை வைத்த நிலையில் ரூ.2 லட்சமாக உயர்த்தப்படும் என ஒன்றிய அரசு அறிவித்தது. இதை நடைமுறைக்கு கொண்டு வர ரிசர்வ் வங்கி நேற்று அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி