இன்று காலை டாக்காவின் புறநகர்ப் பகுதியான சவாரில் முகமதியன் ஸ்போர்டிங் கிளப் மற்றும் ஷைன்புகூர் கிரிக்கெட் கிளப் இடையேயான டாக்கா பிரீமியர் டிவிசன் கிரிக்கெட் லீக் போட்டியின் போது பங்களாதேஷ் அணியின் முன்னாள் கேப்டன் தமீம் இக்பாலுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. ஹெலிகாப்டர் மூலம் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சித்தபோது நெஞ்சுவலி தீவிரமடைந்தது. இதனையடுத்து ஃபாசிலதுன்னேசா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சையில் உள்ளார்.