கோவையில் பாஜக கூட்டணியில் விரிசல்

51பார்த்தது
கோவையில் பாஜக கூட்டணியில் விரிசல்
தேர்தல் பணிகளில் இருந்து விலகிக் கொள்வதாக பாமக மாவட்ட செயலாளர் கோவை ராஜ் அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேட்புமனு தாக்கல், தேர்தல் அலுவலகம் திறப்பு என எதற்குமே பாமகவை அழைக்கவில்லை. கூட்டணி தர்மம் முக்கியம்தான், ஆனால், அதைவிட சுயமரியாதை முக்கியம். கோவை பாஜக தேர்தல் பொறுப்பாளர் கூட்டணி தலைவர்களை மதிப்பதில்லை என கோவை ராஜ் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். தேர்தல் நெருங்கிவரும் சூழலில் அவரது இந்த விலகல் பாஜக - பாமக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி