வந்தே பாரத் ரயில்களுக்கு மக்களுக்கிடையே கிடைத்த வரவேற்பை அடுத்து, குஜராத் மாநிலம் அகமதாபாத் - புஜ் இடையேயான நாட்டின் முதல் வந்தே மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி வரும் 16ம் தேதி தொடங்கி வைக்க உள்ளார். முழுவதும் குளிர்சாதன பெட்டிகளைக் கொண்ட முன்பதிவில்லா ரயிலாக 'வந்தே மெட்ரோ' ரயில்கள் இயக்கப்படவுள்ளன. முதற்கட்டமாக 12 பெட்டிகளுடன் இயக்கப்பட உள்ளது. இந்நிலையில், மக்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.