ஒவ்வொரு இந்தியரின் குரலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை

76பார்த்தது
ஒவ்வொரு இந்தியரின் குரலாக காங்கிரஸ் தேர்தல் அறிக்கை
ஒவ்வொரு இந்தியரின் குரலாகக் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை ஒலிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள காணொலியில், காங்கிரஸின் தேர்தல் அறிக்கை புரட்சிகரமான அறிக்கை என்று பலரும் பாராட்டியுள்ளனர். மக்களின் கருத்துக்கள் அடிப்படையில் இந்த தேர்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. இதற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி. காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்த உங்களின் கருத்துகளை மின்னஞ்சல், குறுந்தகவல் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக தெரிவிக்குமாறு உங்கள் அனைவரையும் கேட்டுக்கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி