காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம்

57பார்த்தது
காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம்
வரும் 7ம் தேதி காங்கிரஸ் கட்சியின் மத்திய தேர்தல் குழு கூட்டம் நடைபெறும் என தகவல் வெளியாகி உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பாளர்களை இறுதி செய்யும் ஆலோசனைக் கூட்டம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, பாஜக மக்களவை தேர்தலுக்கான 195 இடங்களுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதனால், உடனடியாக வேட்பாளர்களை இறுதி செய்யும் பணியில் காங்கிரஸ் தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதன் மூலம் தமிழ்நாட்டிலும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்படுவார்கள் என கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி