அதிமுகவுடன் மீண்டும் கூட்டணி? - பாஜக ஆடும் ஓபிஎஸ் கேம்

1089பார்த்தது
அதிமுகவுடன் மீண்டும்  கூட்டணி? - பாஜக ஆடும் ஓபிஎஸ் கேம்
சென்னையில் இன்று நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்று உரையாற்றினார். இந்த பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் ஜி.கே.வாசன், பாரிவேந்தன், ஏ.சி.சண்முகம், ஜான் பாண்டியன் ஆகியோர் பங்கேற்ற நிலையில் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்கவில்லை. கடந்த முறையும் ஓபிஎஸ் அணிக்கு அழைப்பு விடுக்கப்படாத நிலையில் இந்த முறையும் அவர்களை பாஜக தவிர்த்துள்ளது. மீண்டும் அதிமுகவை கூட்டணிக்கு இழுக்க பாஜகவின் ராஜதந்திரிகள் முனைப்பு காட்டி வருவதால் ஓபிஎஸ் தவிர்க்கப்பட்டுள்ளார் என்று அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி