பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் 2வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் 201 வாக்குகள் பதிவானதை தொடர்ந்து 2வது முறையாக ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக தேர்வானார். பாகிஸ்தானில் நாடாளுமன்ற தேர்தலுக்கு பின் இழுபறி நீடித்த நிலையில், பிரதமராக ஷெபாஸ் ஷெரீப் பதவியேற்றுள்ளார். 336 உறுப்பினர்களில் பிரதமராக 169 உறுப்பினர்கள் ஆதரவு போதும் என்ற நிலையில் ஷெபாஸ் 201 வாக்குகள் பெற்று தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்துள்ளார்.