சாதாரண காய்ச்சல் VS டெங்கு காய்ச்சல்

74பார்த்தது
சாதாரண காய்ச்சல் VS டெங்கு காய்ச்சல்
தற்போது வேகமாக பரவி டெங்கு காய்ச்சலுக்கும், சாதரண காய்ச்சலுக்கும் பலருக்கும் வித்தியாசம் தெரியாமல் இருந்து வருகிறது. ஏனென்றால் ஆரம்ப நிலையில் இரண்டு காய்ச்சல்களும் ஒரே மாதிரியான அறிகுறிகளை வெளிப்படுத்தும். 102 டிகிரிக்கு மேல் காய்ச்சல், தலைவலி, குமட்டல், இருமல், தொண்டை வலி ஆகியவை பொதுவான அறிகுறிகள் ஆகும். ஆனால் டெங்கு காய்ச்சல் வந்தால், கடுமையான தசை, மூட்டு வலி, கண்களில் வலி, மூக்கு, ஈறுகளில் ரத்தம் கசிவது, சிவப்பு நிறத்தில் அரிப்புகள், புள்ளிகள் தோன்றுவது, ரத்த பரிசோதனையில் ப்ளேட்லெட் குறைவு ஆகியவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள்.

தொடர்புடைய செய்தி