நாமக்கல் தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை

81பார்த்தது
நாமக்கல் தனியார் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இளையம்பாளையம் பகுதியில் விவேகானந்தா கல்வி குழுமத்தின் கீழ் மருத்துவக் கல்லூரி, பொறியியல் கல்லூரி, கலை அறிவியல் கல்லூரி, ஆசிரியர் பயிற்சி கல்லூரி, நர்சிங் கல்லூரி என 18க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளது.

இதில், மகளிர் கல்லூரி நிறுவனமான விவேகானந்தா கல்லூரி நிறுவனத்தில் இன்று (மே 16) வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். வரி ஏய்ப்பு புகார் தொடர்பாக இன்று சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி