டி20 உலகக் கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இன்று(ஜூன் 5) தனது முதல் போட்டியில் அயர்லாந்து அணியுடன் விளையாட உள்ளது. குரூப் ஏ-வில் உள்ள இந்திய அணி, இந்திய நேரப்படி இன்று இரவு 8 மணிக்கு இந்தப் போட்டியில் விளையாட உள்ளது. இந்நிலையில், இந்திய அணிக்கு தனது வாழ்த்தினை ஜெய் ஷா தெரிவித்துள்ளார். “கோப்பையை வென்று வாருங்கள். ஜெய் ஹிந்த்” என தனது சமூக வலைதள பதிவில் அவர் தெரிவித்துள்ளார்.