வால்பாறை - Valparai

கோவை: மாநில பெண் குழந்தைகள் தின விழா கொண்டாட்டம்

கோவை, காளப்பட்டியில் உள்ள தனியார் கல்லூரியில் சமூக நலத் துறையின் சார்பில் பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டத்தின் கீழ் மாநில பெண் குழந்தைகள் தின விழா, கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பனவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. விழாவில் மாணவர், மாணவிகள் இணைந்து பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் பிரம்மாண்ட வடிவமைப்பை நிகழ்த்தி, கலாம்ஸ் வேல்டு ரெக்கார்ட் சாதனையை படைத்தனர். விழாவில் உரையாற்றிய மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க. கிரியப்பணவர், பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் திட்டம் குறைந்து வரும் பெண் குழந்தைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும், பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதற்கும், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்வதற்கும் தொடங்கப்பட்ட திட்டம் என்று கூறினார். மேலும், அரசு அலுவலகங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் பங்கு சமூகத்தில் அதிகரித்து வருவதை சுட்டிக்காட்டினார். பெண்கள் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெற பள்ளி, உயர் கல்வி மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்குவது அவசியம் என்றும், இதற்காக அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

வீடியோஸ்


கோயம்புத்தூர்