கோவை: இளைஞரை தாக்கியவர் மீது நடவடிக்கை எடுக்க சாலை மறியல்!

50பார்த்தது
கோவை மாவட்டம், இடிகரை கிராமம், மணியகாரம் பாளையம், அண்ணா நகர் பகுதியில் தாய் தந்தையை இழந்து, திருமணமாகாமல், தனது மாடுகளை குடும்பமாக நினைத்து வாழ்ந்து வரும் இளைஞர் ஒருவர், அப்பகுதியின் 6 - வது தி. மு. க வார்டு கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் அவரது மகனால் தாக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி நிலையில் நேற்று முன்தினம் இரவு அவரது குடும்பத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர் அதனால் அங்கு பரபரப்பை ஏற்பட்டது. மேலும் கவுன்சிலர் மாரிமுத்து மற்றும் அவரது மகன் உதயசங்கர் ஆகியோர் மது போதையில் இளைஞர் ராமகிருஷ்ணன் வீட்டின் முன்பு வந்து, வீட்டின் முன்பு மாடுகள் கட்டக் கூடாது என்று கூறி தகாத வார்த்தைகளால் திட்டியும், கவுன்சிலர் மகன் உதயசங்கர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. அதோடு இருவரும் சேர்ந்து ராமகிருஷ்ணனை அடித்து உதைத்து உள்ளனர்.
இந்த தாக்குதலில் காயமடைந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதி மக்கள் நேற்று இரவு சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி