கோவை: கல்லூரி வளாகத்திற்குள் புகுந்த ஒற்றைக் காட்டு யானை

71பார்த்தது
கோவை, தொண்டாமுத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில மாதங்களாக யானைகள் நடமாட்டம் அதிகரித்து காணப்படுகிறது. மேலும் உணவு தேடி அப்பகுதி கிராமங்கள் மற்றும் விவசாய நிலங்களுக்குள் புகுந்து சேதத்தை ஏற்படுத்தி வருகிறது. மேலும் மனிதர்களையும் தாக்கி வருகிறது. யானைகள் ஊருக்குள் வராமல் இருக்க தமிழக அரசு வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடர்ந்து பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர். 

இந்நிலையில், கோவை ஆலாந்துறையில் காருண்யா பல்கலைக்கழகம் உள்ளது. கல்லூரி வளாகத்திற்குள் நேற்று (ஜனவரி 30) இரவு புகுந்த ஒற்றை காட்டு யானை உணவு தேடி கல்லூரியில் ஒவ்வொரு பகுதியாக அலைந்து திரிந்து கொண்டு இருந்தது. இது குறித்து கல்லூரி நிர்வாகத்தினர் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர்.

தொடர்புடைய செய்தி