கேரள மாநிலம், திருச்சூர் மாவட்டம் சாலக்குடி - வால்பாறை சாலையில் அதிரப்பள்ளி நீர்வீழ்ச்சி அமைந்துள்ளதால், சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனர். நேற்று முன்தினம் மாலை, வால்பாறையிலிருந்து சாலக்குடி நோக்கி நூற்றுக்கும் மேற்பட்ட சுற்றுலா வாகனங்கள் மற்றும் கேரள மாநில அரசு பஸ்கள் சென்று கொண்டிருந்தபோது, பத்திரிப்பாலம் அருகே கபாலி என்ற ஒற்றை யானை சாலையை மறித்து வாகனங்களைத் தடுத்தது.இதனால் பீதியடைந்த சுற்றுலாப் பயணிகள் தங்கள் வாகனங்களை பின்னோக்கி நகர்த்தினர். ஆனால், யானை விடாமல் விரட்டியதால்,
போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறையினர், நீண்ட போராட்டத்திற்குப் பின் யானையை வனப்பகுதிக்குள் விரட்டினர். இந்த சம்பவத்தால், வால்பாறை - சாலக்குடி சாலையில் இரண்டு மணி நேரம்
போக்குவரத்து பாதிக்கப்பட்டது.