IPL 2025: நடப்புச் சாம்பியனான கேகேஆர் அணி அடுத்தடுத்து விக்கெட்களை இழந்து தடுமாறி வருகிறது. டாஸ் வென்ற ஆர்சிபி அணி பௌலிங்கை தேர்வு செய்தது. முதல் ஓவரை வீசிய ஹேசில்வுட் டி காக் விக்கெட்டை வீழ்த்தினார். இதைத்தொடர்ந்து ஜோடி சேர்ந்த நரைன், ரகானே ஜோடி ஆர்சிபி பந்துவீச்சை சிதறடித்தது. இந்நிலையில், கேகேஆர் பேட்டர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்தனர். தற்போது கேகேஆர் அணி 17 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்துள்ளது.