எலான் மஸ்க் ட்விட்டரை ‘X’ என மறுபெயரிட்டு பல மாற்றங்களை செய்து வருகிறார். இதன் ஒரு பகுதியாக, ட்விட்டரின் பிரபலமான நீல நிற பறவை லோகோ, சில மாதங்களுக்கு முன் சான் பிரான்சிஸ்கோ தலைமையகத்திலிருந்து அகற்றப்பட்டது. தற்போது, அந்த 12 அடி நீளமும், 9 அடி அகலமும் கொண்ட 254 கிலோ எடை உள்ள பறவை சின்னம், $34,375 (சுமார் ரூ.28,61,000) க்கு ஏலத்தில் விற்கப்பட்டுள்ளது. இந்த ஏலத்தை நடத்திய RR Auction நிறுவனம், வாங்கிய நபரின் விபரங்களை வெளியிடவில்லை.