புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்தவர் யோகநாதன் (30). இவர் ரத்தினபுரியில் உள்ள டாஸ்மாக் பாரில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். நேற்று காலை 10 மணியளவில் யோகநாதன் பாரை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த வாலிபர் ஒருவர் மதுபாட்டில் கேட்டுள்ளார். அதற்கு யோகநாதன் பார் 12 மணிக்குதான் திறக்கப்படும், பிறகு வருமாறு தெரிவித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், ஆத்திரமடைந்த அந்த வாலிபர் கத்தி முனையில் மிரட்டி யோகநாதனிடம் இருந்த 300 ரூபாயை பறித்துக் கொண்டு தப்பினார். இது குறித்து யோகநாதன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், பார் ஊழியரை மிரட்டி பணம் பறித்தது சாயிபாபா கோயில் கருணாநிதி நகரை சேர்ந்த டூவீலர் மெக்கானிக் முத்துப்பாண்டி (28) என்பது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்தனர்.