கோவை மாவட்டம் வால்பாறை தாலுக்கா பகுதிக்கு உட்பட்ட வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கன மழை பெய்து வருவதால் சுற்றுலா பயணிகள் பொதுமக்கள் சிரமத்திற்குள் ஆளாகி வருகின்றனர். வானிலை மாற்றம் ஏற்பட்டு வருவதினால் வால்பாறை அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் வெளுத்து வாங்கி கனமழையால் வாகன ஓட்டிகள் அவதி அடைந்து வருகின்றனர் இன்று.