கோவை: கல்லறை தோட்டத்தில் எரிந்த நிலையில் சடலம்!

68பார்த்தது
கோவை, புளியகுளம் சவுரிபாளையம் சாலையில் புனித மேரி ஆர்தெடஸ் பேராலயத்திற்கு சொந்தமான கல்லறை தோட்டம் அமைந்துள்ளது. இங்கு, நூற்றுக் கணக்கான கிறிஸ்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், கல்லறை தோட்டத்திற்கு பின்புறம் உள்ள சாக்கடை கால்வாயை ஒட்டி பாதி எரிந்த நிலையில் சடலம் மற்றும் எரிந்த நிலையில் உடல் பாகங்கள் சிதறி கிடப்பது அப்பகுதி மக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வழக்கமாக கல்லறை தோட்டங்களில் உயிரிழந்த கிறிஸ்தவர்களின் உடல்கள் அடக்கம் செய்யப்படுவது வழக்கம். ஆனால், இங்கு பாதி எரிந்த நிலையில் உடல் பாகங்கள் மற்றும் சடலம் ஆகியவை கிடப்பது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. இங்கு இறந்தவர்களின் உடல் எரிக்கப்பட்டு பாதி எரிந்த நிலையில் கிடக்கிறதா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்பது குறித்து இன்னும் விவரங்கள் தெரிய வரவில்லை. இந்த சம்பவம் அப்பகுதி மக்கள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், இந்த கல்லறை தோட்டத்தில் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இங்கு அடிக்கடி மது அருந்துவது, சூதாடுவது போன்ற சட்டவிரோத செயல்கள் நடைபெறுகின்றன. அதனால் காவல் துறையினர் சம்பவங்களை விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி