கோவை குற்றாலம், சிறுவானி மலைத்தொடர்களில் தோன்றும் மென்மையான நீர்வீழ்ச்சியுடன் அழகிய இடமாக உள்ளது. கோய ம்புத்தூரிலிருந்து 35 கி. மீ. தொலைவில் நகரத்தின் மேற்கே மேற்கு தொடர்ச்சிமலைத்தொடரில் அமைந்துள்ளது.
கோவை குற்றாலம் சுற்றுலா பகுதி கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளப்பெருக்கு காரணமாக மூடப்பட்டிருந்த நிலையில் இன்று 03-09-2024 மீண்டும் திறக்கப்படும் நிலையில் சுற்றுலா பயணிகளுக்கு குற்றாலத்தில் குளிக்க அனுமதி வழங்கப்பட்டு இருப்பதாக வனத்துறை வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.