கோவை மாவட்டம் தொண்டாமுத்தூர் அருகே உள்ள விராலியூர் பகுதியில் நேற்று காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழந்த நிலையில் இருவர் படு காயங்களுடன் மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சையில் உள்ளனர்.
இந்நிலையில் அதே காட்டு யானை இன்று காலை பொதுமக்கள் சிலரையும் தாக்கியுள்ளது. இரு தினங்களில் யானை தாக்கி 8 பேர் காயம் அடைந்துள்ளனர்.
இந்நிலையில் அந்த பகுதி பொதுமக்களுடன் தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதி உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான எஸ். பி. வேலுமணி
கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்து மனு அளித்தார்