நிமிர்வு கலையகம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்தார்

62பார்த்தது
கோவை சுங்கம் பகுதியில் உள்ள மருவரசி வளாகத்தில் நிமிர்வு கலையகம் சார்பில் நாட்டார் கலை ஆட்டங்களுக்கான தனியொரு முதன்மை அரங்கம்(Folk Studio) இன்று திறக்கப்பட்டது.

இதனை பேரூர் ஆதினம் சாந்தலிங்க மருதாசல அடிகளார் திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் நாட்டார் கலைஞரும் திரைப்பட நடிகையுமான தீபா சங்கர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.

இங்கு பறை இசை ஆட்டம், துடும்பு இசை ஆட்டம், ஒயிலாட்டம், உடுக்கை இசை, பெட்டிப்பறை, நாட்டார் பாடல்கள், செண்டைமேளம், சதிராட்டம்(பரதம்), செவ்வியல் இசை, மேற்கத்திய ஆட்டம், சிலம்பம், அடிமுறை களரி, வள்ளி கும்மி ஆகியவை பயிற்று விக்கப்பட உள்ளது.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட நடிகை தீபா சங்கர், மேடை நிகழ்ச்சியில் பேசுவது போல் பேசி அசத்தினார்.

தொடர்ந்து மேலும் அவர் கலை குழுவில் இருந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டார்.

தொடர்புடைய செய்தி