தென்காசி: சிவகிரியை சேர்ந்தவர்கள் ராமேசுவரன், பாஞ்சாலி தம்பதி. 2 மகன்கள் உள்ளனர். சம்பவத்தன்று பாஞ்சாலி கடையில் பொருட்கள் வாங்கிக் கொண்டிருந்த போது அந்தப் பகுதியாக வந்த ஒருவர் திடீரென மறைத்து வைத்திருந்த கத்தியால் பாஞ்சாலியை சரமாரியாக குத்திவிட்டு தப்பினார். இதில் சம்பவ இடத்திலேயே பாஞ்சாலி உயிரிழந்தார். தப்பிச்சென்ற குற்றவாளியை சற்று நேரத்திலேயே போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர் வாசுதேவநல்லூரைச் சேர்ந்த சமுத்திரவேல் (44) கூலித் தொழிலாளி என தெரியவந்தது.