கடந்த 2024-ம் ஆண்டில் இந்திய கார்களின் மொத்த விற்பனை 43 லட்சமாக உயர்ந்துள்ளது. 2023-ல் 41 லட்சத்து 7 ஆயிரம் கார்கள் மட்டும் விற்பனையாகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஆண்டு கார் விற்பனையானது 4.5 சதவீதம் அதிகரித்துள்ளது. மாருதி, ஹுண்டாய், டாடா மோட்டார்ஸ், டயோட்டா கிர்லோஸ்கர், கியா என முன்னணி கார் நிறுவனங்கள் அனைத்தும் இதுவரை இல்லாத அளவுக்கு கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளன.