தனது குழந்தையின் பாலினத்தை யூடியூபர் இர்ஃபான் அறிவித்தது மற்றும் குழந்தை தொப்புள் கொடியை வெட்டியது உள்ளிட்ட விவகாரங்கள் சர்ச்சையை கிளப்பின. அவர் மீது நடவடிக்கை எதுவும் எடுக்கபடாத நிலையில் திமுகவுடன் இர்ஃபான் நெருக்கமாக உள்ளதே இதற்கு காரணம் என விமர்சிக்கப்பட்டது. இதற்கு விளக்கமளித்த இர்ஃபான், "எனக்கு எந்த அரசியல் பின்புலமும் கிடையாது, உதயநிதியுடன் நான் வெளியிட்ட வீடியோ புரோமோசனுக்கானது" என்றார்.