சிவகங்கை: காரைக்குடி அருகே உள்ள பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில், புத்தாண்டை முன்னிட்டு நேற்று (ஜன., 01) நடிகர் சசிகுமார் தரிசனம் செய்தார். அவருடன், மிகுந்த ஆர்வத்துடன் பக்தர்கள் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர். அங்கிருந்த பக்தர்கள் பலருடனும் பொறுமையாக செல்ஃபி எடுத்து, புத்தாண்டு வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டார். அவருக்கு கோயில் ஊழியர்கள் உற்சாக வரவேற்பு அளித்திருந்தனர்.