கர்நாடகா: கதேவனபுரா கிராமத்தை சேர்ந்தவர் ராஜசேகர் (33). இவர் 9 ஆண்டுகளாக ஜெர்மன் செப்பர்டு வகை நாயை வளர்த்து வந்தார். அதன் மீது மிகுந்த பாசம் வைத்திருந்த நிலையில் நேற்று முன்தினம் (டிச. 31) நாய் உடல்நலக்குறைவால் இறந்தது. இதனால் துக்கத்தில் இருந்த ராஜசேகர் அதே நாள் நள்ளிரவில் நாயை கட்டிப்போட பயன்படுத்தும் இரும்பு சங்கிலியால் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.