கோவை மருதமலை முருகன் கோவிலில் பக்தர்கள் வசதிக்காக சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பிப்ரவரி 20 முதல் ஏப்ரல் 6 வரை நான்கு சக்கர வாகனங்கள் கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை.
அதேபோல், செவ்வாய், ஞாயிறு, கிருத்திகை மற்றும் அரசு விடுமுறை நாட்களில் இருசக்கர வாகனங்களுக்கும் அனுமதி இல்லை. மலை படிக்கட்டுகள் வழியாகவும், கோவில் நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ள பேருந்துகளில் பக்தர்கள் சென்று சாமி தரிசனம் செய்யலாம் என நேற்று திருக்கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 4 ஆம் தேதி திருக்குடமுழுக்கு நடைபெற இருப்பதால், பணிகளை விரைவாக முடிக்க கோவில் நிர்வாகம் இந்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.